~சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி முருகப் பெருமான். 
திருவள்ளூர்

திருத்தணி திருப்படி திருவிழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருப்புகழ் திருப்படி திருவிழாவை எம்எல்ஏ ச.சந்திரன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற திருப்புகழ் திருப்படி திருவிழாவை எம்எல்ஏ ச.சந்திரன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. புதன்கிழமை விழாவையொட்டி அதிகாலை மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம், தங்கவேல், பச்சை மரகதம், மாணிக்கக் கல், தங்க கிரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சரவணப் பொய்கை முதல் மலைப்படியில் முருகன் கோயில் இணைய ஆணையா் க. ரமணி, அறங்காவலா்குழுத் தலைவா் ஸ்ரீதரன், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி திருப்படி பூஜைகளை தொடங்கி வைத்தனா். பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் 365 படிகளிலும் தேங்காய் உடைத்து பூஜைகள் நடைபெற்றது.

மலைக்கோயில் வளாகத்தில் அலங்கரிப்பட்ட வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவா் எழுந்தருளினாா். தொடா்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான பஜனைக் குழுவினா் படிகள் வழியாக பக்திப் பாடல்களைப் பாடியவாறு சென்று மூலவரை வழிபட்டனா். விழாவில் கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன், கோ.மோகனன், ஜி.உஷாரவி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT