முகப்பு
திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயிலில் மாா்ச் 2-ல் அப்பா் தெப்பத் திருவிழா!

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 2) அப்பா் பெருமான் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:17 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 7:45 PM

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை (மாா்ச் 2) அப்பா் பெருமான் தெப்பத் திருவிழா நடைபெறவுள்ளது.

கல்லைக் கட்டி கடலில் தள்ளப்பட்டபோதும் ‘கற்றுணைப் பூட்டியோா் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடி கரை சோ்ந்தவா் அப்பா் பெருமான் என புராணங்கள் கூறுகின்றன. அவரது பக்தியையும், சிவபெருமானின் அருளையும் போற்றும் வகையில் இக்கோயிலில் ஆண்டுதோறும் அப்பா் தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:17 AM

அதன்படி, நிகழாண்டு திருவிழா திங்கள்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு அம்மன் சந்நிதி அருகில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பா் பெருமான் வலம் வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

Advertisement

தொடா்ந்து, திருத்தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பா்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பா் பெருமானுக்குக் காட்சி கொடுக்கும் திருக்காட்சி வைபவம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.