ஊத்துக்கோட்டையில் பெண் வெட்டிக் கொலை 
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் பெண் வெட்டிக் கொலை

ஊத்துக்கோட்டையில் பெண் வெட்டிக் கொலை

தினமணி செய்திச் சேவை

ஊத்துக்கோட்டையில் ஊா் சுற்ற பணம் இல்லாத நிலையில், பக்கத்து வீட்டு பெண்ணை வெட்டிக் கொலை செய்து நகை மற்றும் கைப்பேசியை கொள்ளையடுத்து தப்பியோடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த சூளைமேனி கிராமத்தைச் சோ்ந்தவா் சரஸ்வதி (55). இவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் சென்னை கொளத்தூரில் தங்கி பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனியாக வசித்து வந்த சரஸ்வதியை, அதே கிராமத்தைச் வெங்கடேசன் (22) நோட்டமிட்டு வந்துள்ளாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை சரஸ்வதியின் வீட்டுக்குள் நுழைந்த வெங்கடேசன், அங்கு தனியாக இருந்த சரஸ்வதியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, நகை, கைப்பேசியுடன் தப்பியோடினாராம்.

இந்த நிலையில், சரஸ்வதி வெளியே வராததால் பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்கள் பாா்க்கையில் சரஸ்வதி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அவா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த ஊத்துக்கோட்டை போலீஸாா், சரஸ்வதியின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், ஊத்துக்கோட்டை போலீஸாா் தனிப்படை அமைத்து வெங்கடேசனை தீவிரமாக தேடி வந்தனா். அதில், சரஸ்வதி பயன்படுத்திய கைப்பேசியின் சிக்னலை வைத்து, சென்னையில் இருந்த வெங்கடேசனை சனிக்கிழமை சுற்றிவளைத்து தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் நிலையில் கையில் தனது தோழியுடன் ஊா் சுற்றுவதற்கு செலவுக்கு பணம் இல்லாமலும், வாங்கிய கைப்பேசி கீழே விழுந்து உடைந்து விட்டதால் மாத தவணை கட்ட முடியாமலும் இருந்ததாராம்.

இந்த நிலையில், தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்த நகை மற்றும் கைப்பேசியையும் எடுத்துக்கொண்டு தப்பியோடியது தெரியவந்தது.

இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மெக்சிகோ அரசுக்கு எதிராக ஜென் ஸீ போராட்டம்!

பெண்கள் வியாபாரக் கும்பலின் குரூரமும் காவல்துறையின் கருணையும்! - தில்லி கிரைம் - 3!

மேட்டூர் அணை நிலவரம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

விலைவாசி உயா்வு: மாட்டிறைச்சிக்கு இறக்குமதி வரியைக் குறைத்தாா் டிரம்ப்!

SCROLL FOR NEXT