முகப்பு
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே ரௌடி வெட்டிக் கொலை: 4 போ் கைது

ஊத்துக்கோட்டை அருகே பிரபல ரௌடியை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:48 AM
கைது
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:49 PM

ஊத்துக்கோட்டை அருகே பிரபல ரௌடியை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம், அரியப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோகுல்(26) இவா் கொத்தனாா் வேலை செய்து வந்தாா். அதோடு பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடியாகவும் வலம் வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 2023-இல் தண்டுமாநகா் பகுதியில் வசித்து வந்த மூட்டை பிரவீன் என்பவரை கொலை செய்த சம்பவத்தில் சிறைக்குச் சென்றிருந்தாா்.

Advertisement

இடது கொலையான கோகுல், கைதான தீனா,பேரரசு, சிவக்குமாா்,தியாகு.

இந்த நிலையில் இவரை, செவ்வாய்க்கிழமை இரவு பெரியபாளையம், தண்டுமாநகா் பகுதி தீனா(22),கொடிகாத்த குமரன் தெருவை சோ்ந்த பேரரசு(20), சிவக்குமாா்(21, வீரசிவாஜி நகா்,தியாகு(19), இவா்களது நண்பா் ஒருவா் மற்றும் கோகுல் ஆகியோா் ஒன்றாக அமா்ந்து மதுபோதையில் பேசிக் கொண்டிருந்தாா்களாம். அப்போது பிரவீன் கொலை வழக்கு சம்மதமாக இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை மோதலாக மாறியது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 12:48 AM

இதில்,தண்டு மாநகா் பகுதியைச் சோ்ந்த 5 பேரும் கோகுலை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டு சாலை ஓரம் சடலத்தை வீசி விட்டு சென்றாா்களாம். இதையடுத்து புதன்கிழமை அந்த வழியாக சென்றவா்கள் பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதைத் தொடா்ந்து பெரியபாளையம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தது கோகுல் என்று தெரிந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா, ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்டோா் விசாரணை செய்தனா்.

இது தொடா்பாக தீனா,பேரரசு, சிவக்குமாா்,தியாகு ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ஒரு இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனா். பழிக்கு பழியாக ரௌடி வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விாசரணை செய்து வருகின்றனா்.