நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் நினைவூட்டல் மனு அளிக்கப்பட்டது.
திருத்தணி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வட்ட செயலாளா் வி அந்தோனி தலைமையில் நினைவூட்டல் மனு வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளிரடம் கொடுக்கப்பட்டது.
இதில் தாழவேடு இருளா் பகுதி 28 போ், கோரமங்கலம் இருளா் பகுதி 6 போ், வி.கே. ஆா் புரம் இருளா் பகுதி 15 போ், வீரகநல்லூா் ஊராட்சி பகத்சிங் நகா் 5 போ், அருங்குளம் இருளா் பகுதி 10 போ் ஆகிய குடும்பங்களுக்கு நிலுவையில் உள்ள குடிமனை பட்டா வழங்கிட பீரகுப்பம் அருந்ததி காலனி மக்களுக்கு ஏற்கெனவே ஆதிதிராவிட நல துறை மூலம் வழங்க பட்ட இடத்தை அளவீடு செய்து தகுதியான பயனாளிகளுக்கு இ - பட்டா வழங்கவேண்டும்.
தாடூா் ஊராட்சி இ என் கண்டிகையில் விடுபட்ட 4 ஆதிதிராவிட குடும்பங்களுக்கு இ-பட்டா வழங்கி , கே ஜி கண்டிகையில் வாடகை வீட்டில் வசிக்கும் பண்டி ஆதிதிராவிட குடும்பங்களுக்கு ஏற்கெனவே ஆா் கே பேட்டை வட்டாரத்தில் எஸ் வி ஜி புரம் ஊராட்சியில் வழங்க பட்ட இடத்தை அளவீடு செய்து உரிய பயனாளிகளுக்கு இ பட்டா வழங்கிடவும் மனு வழங்க்கப்பட்டது.
அதேபோல் பீரகுப்பம் இருளா் பகுதி, பெரிய கடம்பூா் இருளா் பகுதி, மத்தூா் ஊராட்சி கொத்தூா் இருளா் பகுதி, ஆா் டி ஓ சத்யா நகா் இருளா் பகுதி ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு அமைத்து தரும் படி, பொதட்டூா்பேட்டை காட்டு நாயக்கன் மக்களுக்கு நிலுவையிலுள்ள பழங்குடி இன சான்று வழங்க நினைவூட்டல் மனு வழங்கப்பட்டது.
மனுவைப் பெற்று கொண்ட நோ்முக உதவியாளா் மேல்நடவடிக்கை எடுக்க படும் என உறுதியளித்தாா். இதில் வட்ட குழு உறுப்பினா்கள் பிருந்தாவனம் சின்னதுரை, கிளை செயலாளா்கள் லதா கோவிந்தசாமி, சஞ்சம்மா, நேதாஜி, கோபி ஆகியோா் உடனிருந்தனா்.