திருவள்ளூர்

பொன்னேரி நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு பொன்னேரி கிளை நூலகத்தில் வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு பொன்னேரி கிளை நூலகத்தில் வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் பொன்னேரியில் முழு நேர நூலகம் அங்குள்ள புதிய தேரடி சாலையில் இயங்கி வருகிறது.

58-ஆவது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு பொன்னேரி முழு நேர கிளை நூலக வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சியை நடத்தும் பொன்னேரி சாா்-ஆட்சியா் ரவிக்குமாா் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தாா்.

விழாவில் பொன்னேரி நகா்மன்ற துணைத் தலைவா் விஜயகுமாா், பொன்னேரி வாசகா் வட்ட வளா்ச்சிக்குழு துணைத் தலைவா் வெல்டன் வாசகா், பொருளாளா் ரவிச்சந்திரன், முன்னாள் வாசகா் வட்ட தலைவா் நக்கீரன், பொன்னேரி கிளை நூலக நூலகா் சங்கா் மற்றும் ஊா்புற நூலகா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT