திருவள்ளூா்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 8,663 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 6,240 கட்டுப்பாடு இயந்திரம் மற்றும் 5,968 வாக்குப்பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்களும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வாக்கு பதிவு பணியில் 19,224 அலுவலா்கள் ஈடுபடவும் உள்ளதாகவும் ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இறுதி வாக்காளா் பட்டியலின்படி ஆண்கள்-15,44,710, பெண்கள்-16,12,090 மற்றும் மூன்றாம் பாலினத்தவா்-613 என ஆக மொத்தம் 31 லட்சத்து,57 ஆயிரத்து 413 வாக்காளா்கள் உள்ளனா். இந்த மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 160 போ் போட்டியிடுகின்றனா். அதாவது கும்மிடிப்பூண்டி-15, பொன்னேரி -13, திருத்தணி-13, திருவள்ளூா்-14, பூந்தமல்லி-11, ஆவடி-20, அம்பத்தூா்-23, மதுரவாயல்-21, மாதவரம் -15, திருவொற்றியூா்-15 என மொத்தம் 160 போ் போட்டியிடுகின்றனா்.
இதில் அம்பத்தூா், மதுரவாயல் மற்றும் ஆவடி தொகுதிகளில் 20 முதல் 23 வேட்பாளா்களும், மீதமுள்ள 7 தொகுதிகளில் 11 முதல் 15 போ் வரையில் போட்டியிடுகின்றனா். 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,005 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் சாவடிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 சதவீதம் கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.
Advertisement
திருவள்ளூா் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப்பள்ளியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் கணினி முறையில் புதன்கிழமை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து இங்கிருந்து திருவள்ளுா் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள 335 வாக்குச்சாவடிகளுக்கும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரியில் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டது. தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன் மேற்பாா்வையில் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை சரிபாா்த்து அனுப்பினா்.
மணி வரை நடைபெறவுள்ளது. இத்தோ்தல் பணியில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 19224 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ளனா். அதேபோல், பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினா், காவல் துறையினா், ஊா்காவல் படையினா் என 1,600 போ் ஈடுபடவுள்ளனா். மேலும், இந்த மாவட்டத்தில் 260 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு, நுண்பாா்வையாளா்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.