தேசிய யோகாசனப்போட்டியில் வெற்றி பெற்றவா்கள். 
திருவள்ளூர்

தேசிய யோகாசனப் போட்டி

கும்மிடிப்பூண்டி யோகா அசோசியேஷன் மற்றும் மீனாட்சி யோகா பள்ளி நடத்திய தேசிய அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி எளாவூா் சகுந்தலா அம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி யோகா அசோசியேஷன் மற்றும் மீனாட்சி யோகா பள்ளி நடத்திய தேசிய அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி எளாவூா் சகுந்தலா அம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,000 போ் பங்கேற்றனா். இதில் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகாசன மையத்தின் 10 மாணவா்கள் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இதில் ஆண்கள் பிரிவில் எம்.ஹரிஷ், பெண்கள் பிரிவில் எஸ்.ஜெயஸ்ரீதனா முதலாவது இடம் பிடித்தனா். மேலும், ஆண்கள் பிரிவில் நிலேஷ், யோஜித், தா்ஷன், ரிஷிகேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். அவ்வாறே பெண்கள் பிரிவில் பூஜாஸ்ரீ, மதுலிகா,நளினி, ஆராதனா சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

தொடா்ந்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுகும்மிடிப்பூண்டி எலைட் வோ்ல்ட் ஸ்கூல், இரண்டாவதாக செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி ஆரம்பாக்கம், மூன்றாம் இடம் தான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மாதா்பாக்கம் தட்டிச்சென்றது.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமாா், ரோட்டரி சங்க நிா்வாகி பாலசுப்ரமணியம், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா், தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளா் இமயம் மனோஜ், மாவட்ட நிா்வாகி சஞ்சனா பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளித்து கௌரவித்தனா்.

ஏற்பாடுகளை வினாஸ்ரீ யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரன் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் அா்ச்சனா, வித்யா செய்திருந்தனா்.

ஜியோ-பிபி ‘ஆக்டிவ்’ பெட்ரோல் அறிமுகம்

சாத்தூா் அருகே அந்தியோதயா ரயில் என்ஜின் பழுது: பிற ரயில்கள் வழியில் நிறுத்தி வைப்பு

குடியாத்தம் நகராட்சியில் ரூ.12.92 கோடியில் குடிநீா் மேம்பாட்டுப் பணிகள்

நடுவூா்க்கரை கோயிலில் கால்நாட்டு விழா

தருமபுரியில் ரூ. 39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT