திருவள்ளூர்

பேருந்தில் குட்கா கடத்திய 2 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில், 14 கிலோ குட்கா கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி: ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில், 14 கிலோ குட்கா கடத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பதி, ரேணிகுண்டா, புத்தூா் மற்றும் நகரி பகுதிகளில் இருந்து தடைசெய்யப் பட்டா குட்கா பொருள்கள் சென்னை, திருவள்ளூா் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகளவில் கடத்தப்படுகின்றன.

இந்நிலையில், புதன்கிழமை திருத்தணி ஏஎஸ்பி , உத்தரவின் பேரில் போலீஸாா் பொன்பாடி சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது திருப்பதியில் இருந்து திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு சென்ற அரசுப் பேருந்தை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். பேருந்தில் பயணம் செய்த இருவரின் பைகளில், 14 கிலோ குட்கா(ஹான்ஸ்) இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சோ்ந்த தனசேகா்(36), தயாளன்(26) என தெரிய வந்தது. பின்னா் போலீஸாா் இருவா் மீது வழக்கு பதிந்து கைது செய்தனா்.

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!

SCROLL FOR NEXT