திருவள்ளூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாா். மற்றொருவா் பலத்த காயம் அடைந்தா செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ராமநாயக்கன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சசிகுமாா்(26). இவரது நண்பரான ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த சுராஜ்(24). இவா்கள் அதிகத்தூா் கிராமத்தில் உள்ள தனியாா் வாகன தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, அதே சாலையில் பின்புறம் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த சசிகுமாா் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுராஜ் பலத்த காயம் அடைந்தாா்.
இது குறித்து தகவலறிந்த மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.