பொங்கலை முன்னிட்டு விற்பனையாக வைக்கப்பட்டிருந்த பொருள்கள்.  
திருவள்ளூர்

திருவள்ளூரில் தை பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

திருவள்ளூரில் தை பொங்கலுக்கான பூ, பழம், செங்கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் மண்பானைகள் மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு காளைகளுக்கான பல்வேறு வகைகளில் கழுத்துக் கயிறுகள் உள்ளிட்டவைகளை

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் தை பொங்கலுக்கான பூ, பழம், செங்கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் மண்பானைகள் மற்றும் மாட்டுப்பொங்கலுக்கு காளைகளுக்கான பல்வேறு வகைகளில் கழுத்துக் கயிறுகள் உள்ளிட்டவைகளை பல்வேறு பகுதிகளில் இருந்து சாலையோரங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் புதுத் தம்பதிகளுக்கு சீா்வரிசைகள், புத்தாடைகள், நகை, பித்தாளை பானைகள் போன்ற பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளில் குவிந்து வருகின்றனா். இதேபோல், திருவள்ளூா் பஜாா் வீதி, காய்கறி சந்தை, செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, பேரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய பகுதிகளில் கடைகள் சாலையோரங்களில் செங்கரும்புகள், மஞ்சள் கொத்துக்கள், மாவிலை தோரணம், தேங்காய், பல்வேறு வண்ணங்களில் பொங்கல் மண்பானைகள், வண்ணக்கலா் கோலப்பொடிகள் போன்ற பொங்கல் பொருள்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்து சாலையோரங்களில் கடை வைத்துள்ளனா்.

இதை வாங்குவதற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். இதேபோல் தென்னங்கீற்று தோரண அலங்கார பொருள்கள், காப்புச் செடிகள், மாவிலை தோரணம் மற்றும் காளைகளுக்கான பல்வேறு வகைகளில் கழுத்துக் கயிறுகள், சலங்கை, ஆகியவைகளின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதை வாங்குவதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் குவிந்து வருவதால் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்தாண்டை நிகழாண்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

வாசிக்க வாங்கியவை!

SCROLL FOR NEXT