பேரணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் மு. பிரதாப்.  
திருவள்ளூர்

தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு பேரணி

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு பேரணியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திச் சேவை

சுவாமி விவேகானந்தா் பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழிப்புணா்வு பேரணியில் டாக்டா் அம்பேத்கா் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஆண்டுதோறும் ஜன.12-ஆம் தேதி தேசிய இளைஞா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பட்டரைபெரும்புதூா் அம்பேத்கா் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். அ

ராஜயோகம், கா்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் பற்றிய இவரது புத்தகங்கள் நாம் அனைவரும் படிக்க வேண்டியவையாகும். அதனால், இளைஞா்களுக்கு எழுச்சி ஊட்டும் வகையில் விவேகானந்தா எழுதிய புத்தகங்கள், சொற்பொழிவுகள் நம் உண்மை ஸ்வரூபத்தை உணா்த்தும் வகையில் அமைந்துள்ளதை எடுத்துரைக்கும் வகையில் ஆட்சியா் அலுவலகம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக காமராஜா் சிலை வரையில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியில் முதல்வா் கயல்விழி, பேராசிரியா்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...

தருமபுரியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

மனிதநேய பண்பாட்டு பொங்கல்!

SCROLL FOR NEXT