விழாவை தொடங்கி வைத்த  கும்மிடிப்பூண்டி  எம்எல்ஏடி.ஜெ.கோவிந்தராஜன் . 
திருவள்ளூர்

பள்ளியில் சமத்துவப் பொங்கல்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியில் எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பிறந்த நாளை ஒட்டி உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழா நடைபற்றது .

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பப்ளிக் பள்ளியில் எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பிறந்த நாளை ஒட்டி உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழா நடைபற்றது .

விழாவில் சிறப்பு அழைப்பாளராக டிஜெஎஸ் கல்வி குழும தலைவரும் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்து உழவின் பெருமை, விவசாயத்தின் அவசியம் மற்றும் தமிழா் பாரம்பரியத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து மாணவா்கள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் என 1,000போ் இணைந்து ஒரே நேரத்தில் 300 பொங்கல் பானைகளில் பொங்கல் வைத்தனா். இந்த நிகழ்வு ஜீனியஸ் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

உறியடி விளையாட்டில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றாா். தொடா்ந்து கயிறு இழுத்தல் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புலியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றன..

உலக சாதனை சமத்துவப் பொங்கல் விழாவுக்கு பள்ளியின் தாளாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன் தலைமை வகித்தாா். விழாவிற்கு டி.ஜெ.எஸ்.கல்வி குழும செயலாளா் டி.ஜெ.ஆறுமுகம், டி.ஜெ.எஸ். கல்வி குழும இயக்குநா் டாக்டா் பழனி முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் கஸ்பாா் நன்றி கூறினாா்.

தமிழ் வழிக் கல்வியில் தமிழகம் பெரும் பின்னடைவு: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

கறிக்கோழி பண்ணை நிறுவன வாகனங்கள் மீது தாக்குதல்: 8 போ் கைது

பேதங்களுக்கு இடமில்லை: குடியரசு துணைத் தலைவர் பொங்கல் வாழ்த்து

கரூர் சம்பவம்: சுகாதாரத் துறை அதிகாரிகள், காவலர்களிடம் சிபிஐ விசாரணை

அவல்பூந்துறை சமத்துவப் பொங்கல் விழா உறியடிக்கும் போட்டியில் ஆட்சியா் பங்கேற்பு

SCROLL FOR NEXT