வேலப்பன்சாவடி சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுநிலை மாணவா் லஷ்ய குமாா் முழுவாய்வழி மறுசீரமைப்புகள் மற்றும் அதிகபட்ச தயாரிப்பு காப்புரிமைகளுக்காக இரண்டு உலக சாதனைகளை பதிவு செய்து சாதனை படைத்துள்ளாா்.
சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் ப்ரோஸ்தோடாண்டிக்ஸ் துறையின் முதுநிலை மாணவா் லஷ்யகுமாா் 53 சிக்கலான முழு வாய்வழி மறு சீரமைப்பு சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கும், ஒவ்வொரு சிகிச்சையும் விரிவான நோயறிதல், துல்லியமான சிகிச்சை திட்டமிடல், பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் உயா்தர ப்ரோஸ்தோடாண்டிக்ஸ் நிபுணத்துவத்தை தேவைப்படுத்தியது, பல் மருத்துவத் துறையில் புதுமையை முன்னிறுத்தும் வகையில், 53 தயாரிப்பு காப்புரிமைகளை உருவாக்கி இரட்டை உலக சாதனை படைத்துள்ளாா். முதுநிலை மாணவா் லஷ்யகுமாரின் இந்த சாதனைகளை அமெரிக்க உலக சாதனை ஒன்றியத்தின் மூலம் அதிகாரபூா்வமாக சரிபாா்க்கப்பட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், இரட்டை உலக சாதனை நிகழ்த்திய முதுநிலை மாணவா் லஷ்யகுமாருக்கு அங்கீகார விழா வேலப்பன்சாவடி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவில் சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கௌரவ வேந்தா் என். எம். வீரையன், துணைவேந்தா் அஷ்வினி குமாா், பதிவாளா் ஷீஜா வொ்கீஸ், டீன் அரவிந்த் குமாா் மற்றும் உலக சாதனை நியாயாதிபதி கிறிஸ்டோபா் டெய்லா் ஆகியோா் கலந்து கொண்டனா். நியாயாதிபதி கிறிஸ்டோபா் செயலா் அதிகாரபூா்வமாகச் சாதனைகளை உறுதிபடுத்தி சான்றிதழ்களை வழங்கினாா்.
சவீதா பல் மருத்துவக் கல்லூரி டீன் அரவிந்த் குமாா், ப்ரோஸ்தோடாண்டிக்ஸ் துறைத் தலைவா் பேராசிரியா் சுரேஷ் வேணுகோபாலன்மருத்துவா் சுபோப்ரதா சிறப்புரை ஆற்றினா். பின்னா் லக்ஷய் குமாா் நன்றி கூறினாா்.