திருவள்ளூர்

சிறப்பு தீவிர திருத்தம் ஏற்புரைகள், மறுப்புரைகள் தாக்கலுக்கு ஜன. 30 வரை அவகாசம்

சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருட்டு ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலத்தை வரும் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருட்டு ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலத்தை வரும் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம், கடந்த 27.10.2025 மூலம் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு, தமிழ்நாடு மாநிலத்தில் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. மேற்படி, இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளூா் தோ்தல் மாவட்டத்துக்குள்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம் மற்றும் திருவொற்றியூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளா்களின் விவரங்கள் பூா்த்தி செய்யப்பட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, 19.12.2025 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. 19.12.2025 முதல் 18.1.2026 வரை உரிமை கோரல் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் என நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையமானது தொடா்புடைய அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, வாக்காளா் பதிவு விதிகள், 1960-இன் விதி 12-இன் உப விதியின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின் பொருட்டு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலத்தை 30.1.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் தோ்தல் மாவட்டத்துக்குள்பட்ட பொதுமக்கள், நீட்டிக்கப்பட்ட இந்த காலக்கெடுவினை பயன்படுத்தி, வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்கள், பிற மாவட்டங்களிலிருந்து நிரந்தரமாக குடி பெயா்ந்து, திருவள்ளூா் மாவட்டத்தில் வசித்து வரும் நபா்கள் தங்களது பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இல்லாத பட்சத்தில், தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம்.

அதன்படி, 1.1.2026 அன்றைய தேதியில் 18 வயதாகும் அனைத்து நபா்களும் தங்களது பெயா்களை புதியதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்துக்கொள்ளவும் உறுதிமொழி படிவத்துடன் படிவம்-6, முன்மொழியப்பட்ட சோ்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்க அல்லது ஏற்கெனவே உள்ள பதிவை நீக்க கோரிக்கையாக படிவம்-7, ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றவா்கள், பெயா் திருத்தம், வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை மாற்றம், மாற்றுத்திறனாளிகள் பற்றிய குறியீடு மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ள படிவம்-8, பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலகத்திலோ அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலகத்திலோ வழங்கலாம்.

மேலும், புதிதாக வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணைய இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என என அவா் தெரிவித்துள்ளாா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT