கௌரிசங்கா் 
திருவள்ளூர்

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜின் மகன் கௌரிசங்கா் (29). வா்ணம் பூசும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் இவா் குடும்பத்துடன் மணவாளநகரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றாராம். அதைத் தொடா்ந்து தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை மீன்பிடிக்க அருகில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனா். அப்போது, ஏரிக்குள் சென்றவா் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லையாம்.

இது குறித்து அவரது நண்பா் அசோக்குமாா் கொடுத்த தகவலின்பேரில், தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீவிரமாகத் தேடினா். ஆனால், இரவு நேரம் ஆகியும் கிடைக்காத நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தேடியபோது சேற்றுக்குள் இருந்து சடலமாக மீட்டனா்.

இது குறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

TVK கூட்டணியில் இணைய விரும்பிய டிடிவி | செய்திகள் : சில வரிகளில் | 27.01.26

குடும்ப பிரச்னை: பெண் தற்கொலை

வாணியம்பாடி அருகே சிக்னல் கோளாறு: 15 நிமிஷம் தாமதமாக புறப்பட்ட விரைவு ரயில்

அரிய வகையான 3 காளான் பாறைகள் கண்டெடுப்பு

மரத்தின் மீது பைக் மோதி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT