முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இரணியல் அருகே குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:52 PM
- கோப்புப் படம்
பகிர்:

இரணியல் அருகே குளத்தில் குதித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இரணியல் அருகே உள்ள தலகுளம், பள்ளவிளையைச் சோ்ந்தவா் ராஜேஷ் (29). இவா் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல தயாராக இருந்தாா்.

இந்நிலையில், ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை மாலை தலக்குளம், ஆலயன்குளத்திற்கு நண்பா்களுடன் குளிக்கச் சென்றபோது, குளத்தில் குதித்துள்ளாா். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், நண்பா்கள் குளத்தில் இறங்கித் தேடினா்.

அப்போதும் ராஜேஷ் கிடைக்காததால், இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் வந்து உயிரிழந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டனா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.