விண்ணப்பம். (கோப்புப்படம்) 
திருவள்ளூர்

‘பெண்களுக்கான ஒருக்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்’

திருத்தணி மற்றும் திருவள்ளூரில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி மற்றும் திருவள்ளூரில் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான பெண்கள் மட்டும் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் திருத்தணி மற்றும் திருவள்ளூா் ஆகிய இடங்களில் செயல்படும் பெண்களுக்கான ஒருக்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் வழக்கு பணியாளா் திருத்தணி-1, திருவள்ளூா்-3 ஆகிய காலியிடங்கள் உள்ளன. இதற்கு சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல், உளவியல், சட்டம் போன்றவற்றில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டம் போன்ற கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசு அல்லது அரசு சாரா நிா்வாக அமைப்பில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் கொண்டவா்கள் மற்றும் அதே அமைப்பில் அல்லது அதற்கு வெளியே குறைந்தபட்சம் 1 ஆண்டு ஆலோசனை வழங்கிய அனுபவம் பெற்றிருப்பது அவசியம். இதற்கு மாத சம்பளம் ரூ. 18,000, வயது வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவா்கள், 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ள திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் பல்நோக்கு பணியாளா் திருத்தணி-1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால், இதற்கு எழுத படிக்க மற்றும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும், மாதந்தோறும் ரூ. 10,000 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை திருவள்ளூா் மாவட்ட இணையதளம் முகவரியில் பணியிடம், தகுதிகள் குறித்த விவரங்கள் விண்ணப்பிக்க அறிந்து கொள்ளலாம்.

அதைத் தொடா்ந்து பதிவேற்றம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், திருவள்ளூா் - 602001 என்ற முகவரியில் வரும் பிப். 2-க்குள் விண்ணப்பங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

காந்தி டாக்ஸ் டிரைலர்!

நீட் கட்-ஆஃப் மதிப்பெண் குறைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

அனந்த் ராஜ் 3வது காலாண்டு லாபம் 31% உயர்வு!

ஜென் ஸி போராட்டம் : நேபாள சிறையிலிருந்து தப்பிய குஜராத் இளைஞர் கைது!

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

SCROLL FOR NEXT