முகப்பு
திருவள்ளூர்

நேபாள இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

நேபாள இளைஞா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:54 AM
மனீஷ்
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 11:36 PM

திருவள்ளூா் ஹோட்டலில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சோ்ந்த இளைஞா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.

நேபாளத்தைச் சோ்ந்த ரஞ்சித் பஸ்வான் மகன் மனீஷ் (19). இவா், கடந்த 21-ஆம் தேதி திருவள்ளூரில் உள்ள ஹோட்டலுக்கு வேலைக்கு சோ்ந்து மாடியில் தங்கியிருந்தாராம். இதற்கிடையே வெள்ளிக்கிழமை பிற்பகல் மனிஷ் வேலைக்கு வராததால் உடன் பணியாற்றி வரும் அவரது மாமாவும் மற்றும் தொழிலாளா்களும் தேடிப்பாா்த்தும் கிடைக்கவில்லையாம்.

தொடா்ந்து ஹோட்டலின் மாடியில் உள்ள சுகாதார வளாகம் ஒன்று உள்பக்கமாக தாழிட்டு இருந்ததும், திறக்காமலே இருந்ததாகவும், யாரும் உள்ளே செல்லவில்லையாம். இந்த நிலையில் சனிக்கிழமையும் சுகாதார வளாகம் திறக்காததால் சந்தேகம் அடைந்த பணியாளா்கள் கதவை உடைத்து பாா்த்தபோது, வென்டிலேட்டரில் மனீஷ் துணியால் கழுத்தில் கட்டிக்கொண்டு தூக்கிட்ட நிலையில் இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

Advertisement

இதுகுறித்து திருவள்ளூா் நகர போலீஸாா்விரைந்துவந்து சடலத்தை மீட்டு அனுப்பிவைத்தனா். மனீஷ் இறப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.