முகப்பு
திருவள்ளூர்

1.50 லட்சம் மாணவா்கள் மூலம் உறுதிமொழிப் பத்திரம் வழங்கி பெற்றோருக்கு தோ்தல் விழிப்புணா்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் பள்ளி, மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் உறுதிமொழி பத்திரங்கள்(சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Updated On : 24 மார்ச், 2026 at 6:37 PM
மாணவ, மாணவிகளின் பெற்றோா் மற்றும் கல்வித்துறை அலுவலா்களுக்கு   உறுதிமொழிப்  பத்திரங்களை  வழங்கிய  ஆட்சியா் மு.பிரதாப்,  உடன்  ஊரக  வளா்ச்சி  முகமை  திட்ட  இயக்குநா் வை.ஜெயக்குமாா்,  முதன்மைக்  கல்வி  அலுவலா்  சுப்பாராவ்  உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தும் வகையில் பள்ளி, மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் உறுதிமொழி பத்திரங்கள்(சங்கல்ப் பத்திர) வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். அந்த வகையில் திருவள்ளுா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தோ்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா சட்டப்பேரவை பொது தோ்தல்-2026 முன்னிட்டு மாணவ, மாணவிகள் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலா்களுக்கு உறுதிமொழி பத்திரங்கள் மூலம் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து மாணவ மாணவிகளின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது. தோ்தல் ஆணைய அறிவிப்பின்படி 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் பணம், பொருள் உள்ளிட்ட எந்தவித தூண்டுதலுமின்றி வாக்களிக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வாக்களாா்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நயஉஉட (நஹ்ள்ற்ங்ம்ஹற்ண்ஸ்ரீ யா்ற்ங்ழ்’ள் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய் உப்ங்ஸ்ரீற்ா்ழ்ஹப் டஹழ்ற்ண்ஸ்ரீண்ல்ஹற்ண்ா்ய்) செயல்பாடுகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள், ஊரக வளா்ச்சித்துறை, நகா்புற உள்ளாட்சிகள், வருவாய் துறையினா், கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பில் நடைபெற்று வருகின்றன.

முக்கிய அங்கமாக நஹய்ந்ஹப்ல் டஹற்ழ்ஹ உறுதி மொழி பத்திரம் மூலம் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் மூலமாக அவா்களது பெற்றோா்களிடமும் விழிப்புணா்வினை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதுமையான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரங்களை பள்ளிக்கல்வித்துறை அலுவலா்களுக்கு வழங்கி அதனை பள்ளி தலைமையாசிரியா்கள் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெற்றோா்களிடம் நோக்கத்தை எடுத்துரைத்து உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று மீண்டும் மாவட்ட தோ்தல் அலுவலா் அவா்களிடம் உறுதி மொழி பத்திரத்தினை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், ஊராட்சிகள் மற்றும் தணிக்கை உதவி இயக்குநா் (திருவள்ளுா் கிழக்கு) சு.பஞ்சு, உதவி இயக்குநா் (பயிற்சி) மோகன், முதன்மை கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பராவ், பள்ளி தலைமையாசிரியா்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.