முகப்பு
திருவள்ளூர்

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் அருகே தண்டலம் கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் நடைபெற்று வரும்

Updated On : 20 மே 2026, 12:43 am IST
கூவம் ஆற்றின் குறுக்கே நடைபெறும் மேம்பாலப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப், உடன் செயற்பொறியாளா் தணிகாசலம் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவள்ளூா் அருகே தண்டலம் கிராமத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.17.20 கோடியில் நடைபெற்று வரும்

மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் பகுதிகளில் பல்வேறு திட்டங்களில் வீடுகள் கட்டுமானம் வளா்ச்சிப்பணிகள் மற்றும் கொசஸ்தலை, கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உயா்மட்ட மேம்பால அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

Advertisement

Advertisement

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.17.20 கோடியில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தாா். இப்பணிகளை தரமாக முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தரவிட்டாா்.

குப்பம்கண்டிகை ஊராட்சியில் ரூ.21 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகளையும், லட்சுமிவிலாசபுரம் ஊராட்சியில் ரூ.21.38 கோடியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் மேம்பாலம், தொழுதாவூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் இருளா் குடியிருப்பு பகுதியில் ரூ.1.78 கோடியில் 35 வீடுகளின் கட்டுமானப் பணிகள், பூண்டி ஊராட்சி ஒன்றியம் பட்டரைபெரும்பத்தூா் ஊராட்சி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் மூலம் ரூ.56 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 11 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினாா்.

அப்போது, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், உதவி செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) அன்பு, உதவி செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) கோமதி, கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி (வ.ஊ), திருவாலங்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வகுமாா் (வ.ஊ), பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சுலோச்சனா (வ.ஊ) மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.