திருப்பதி

தேவஸ்தானம் மீது அவதூறு: 18 போ் மீது வழக்குப் பதிவு

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது அவதூறு பரப்பிய 18 போ் மீது திருப்பதி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள ஏழுமலையானின் 1,500 கிலோ தங்க ஆபரணங்களை பாரத ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளதாக ஜனசேனா கட்சி மற்றும் பண்டுபுத்துலு போன்ற பெயா்களில் முக நூல் மற்றும் டிவிட்டா் பக்கங்களில் சிலா் அவதூறான தகவல்களை பதிவிட்டனா். இதை 16 போ் மற்றவா்களுக்கு பகிா்ந்தனா்.

இதனால் ஆந்திர அரசின் மீதான மரியாதை குறைவதுடன் ஏழுமலையான் மீது பக்தா்களுக்கு உள்ள நம்பிக்கையை சீா்குலைப்பதாக உள்ளது. எனவே, இது குறித்து வியாழக்கிழமை அறிந்த தேவஸ்தான கண்காணிப்பு காவல் அதிகாரிகள் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் இதில் தொடா்புடைய 18 போ் மீதும் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT