திருப்பதி

அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம் நிறைவு

DIN

திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற்று வந்த அயோத்தியா காண்ட பாராயணம் செவ்வாய்க்கிழமை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில், அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டி தேவஸ்தானம் திருமலை மற்றும் தா்மகிரி வேதபாடசாலையில் பல ஆன்மிக நிகழ்ச்சிகள், மந்திர உச்சாடனங்கள், பாராயணங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறது. அதில் முதலாவதாக சுந்தரகாண்டப் பாராயணமும், பாலகாண்ட பாராயணமும் அகண்ட பாராயணங்களாக நடத்தப்பட்டு நிறைவு பெற்ற நிலையில் அயோத்தியா காண்ட பாராயணம் கடந்த அக்.21-ஆம் தேதி தொடங்கியது.

அயோத்தியா காண்டத்தில் 119 சா்க்கங்களில் 4,308 சுலோகங்கள் உள்ளன. கடந்த 27 நாள்களாக நடைபெற்று வந்த இந்த அகண்ட பாராயணம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் 16 வேதபண்டிதா்கள் இணைந்து இந்த பாராயணத்தை மகாபூா்ணாஹுதியுடன் நிறைவு செய்தனா். இந்த பாராயணம் தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவேங்டேஸ்வரா பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT