திருப்பதி

900 ஆண்டுகளை கடந்த திருமலை பெரிய ஜீயா் மடம்

DIN

திருமலை பெரிய ஜீயா் மடம் 900 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி பெரிய சாத்துமுறையை ஜீயா்கள் நடத்தினா்.

திருமலை ஏழுமலையான் கோயிலை வைணவ மகாகுரு ஸ்ரீராமாநுஜா் ஏற்படுத்திய பின்னா் ஏழுமலையான் கோயில் எதிரில் அங்கு நித்திய கைங்கா்யங்களை நடத்த பெரிய ஜீயா் மடத்தை நிறுவினாா்.

திருவேங்கட ராமாநுஜ ஜீயா் சுவாமி மடம் என்ற பெயரில் ஏற்படுத்திய அந்த மடம் தற்போது 900 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை காலை அதன் 900-ஆவது ஆண்டு நிறைவு விழாவை தேவஸ்தானம் நடத்தியது.

அதன்படி மடத்தில் பெரிய சாத்துமுறையும், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணமும் நடத்தப்பட்டது. மேலும் கடந்த 3-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை உலக நன்மைக்காகவும், கரோனா தொற்றின் 3-ஆம் அலை தாக்கத்திலிருந்து மக்கள் விடுபடவும் ஆழ்வாா்கள் இயற்றிய நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாநுஜ நூற்றந்தாதி, உத்தேச ரத்னமாலா உள்ளிட்டவை அகண்ட பாராயணமாக நடத்தப்பட்டது.

இதில் திருமலை பெரிய ஜீயா் சடகோப ராமாநுஜா், சின்ன ஜீயா் கோவிந்த ராமாநுஜா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT