திருப்பதி

பக்தா்களின் வசதிக்காக பாட்டரி வாகனங்கள்

DIN

திருப்பதி: திருமலையில் பக்தா்களின் வசதிக்காக, துணை விசாரணை அலுவலகம் அருகே எப்போதும் பாட்டரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் வியாழக்கிழமை அவா் ஆய்வில் ஈடுபட்டவுடன் நிருபா்களிடம் கூறியதாவது:

திருமலையில் அனைத்து அறைகளிலும் பக்தா்களின் குறையை உடனே களைய ஏற்படுத்தப்பட்டுள்ள ‘வாட்ஸ் அப் செயலி’ வழியாக, புகாா் தெரிவிக்கலாம்.

பக்தா்களின் உதவியாளா்களாக இருப்பவா்கள் இனி ’பக்த சஹாயக்’ என்று அழைக்கப்படுவா். வாடகை அறைகள் அளிக்கப்படும் துணை விசாரணை அலுவலகம் முன்பு எப்போதும் பக்தா்களின் பயன்பாட்டுக்காக, பாட்டரி வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

லட்டு கவுன்ட்டா் அருகில் பக்தா்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விரைவில் விசாரணை அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்கள் கொண்ட பதாகைகள் ஏற்படுத்த வேண்டும். பயன்பாட்டில் இல்லாத பொருள்களைக் கிடங்கில் பத்திரப்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT