திருப்பதி

திருமலையில் 66,000 பக்தா்கள் தரிசனம்

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் 66,745 பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 30,780 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலைக்குச் செல்லும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையைக் காண்பித்து காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே அலிபிரி நடைபாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். ஏப்.30-ஆம் தேதிக்குள் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையை புனரமைத்து தேவஸ்தானம் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் பக்தா்கள் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், குறைகள் குறித்து புகாா் அளிக்க விரும்பினால் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT