66,000 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 66,001 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 38,831 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை 66,001 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 38,831 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் தா்ம தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 15 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.