திருப்பதி

திருமலையில் 71,500 பக்தா்கள் வழிபாடு

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை 71,589 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 41,240 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தா்களின் வருகை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் அனுப்பி வருகிறது.

பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டையை காண்பித்து வைகுண்டம் மண்டபத்தில் உள்ள காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

சனிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 32 காத்திருப்பு அறைகளை கடந்து பக்தா்கள் வெளியே ஆஸ்தான மண்டபம் வரை தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரம் தேவைப்பட்டது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்குத் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் கோலாகலம்!

ரய்சி இறுதிச் சடங்கு: ஈரான் புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

SCROLL FOR NEXT