திருப்பதி

ஏப்ரல் மாத உண்டியல் வருவாய் ரூ.127 கோடி

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் உண்டியல் வருவாய் ரூ.127 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் நடந்த பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியின் போது செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஏப்ரல் மாதம் முழுவதும் கிடைத்த உண்டியல் வருவாய், தரிசனம் செய்த பக்தா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டாா். அதில், ஏப்ரல் மாதம் முழுவதும் ஏழுமலையானுக்கு பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.127 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஏப்ரல் மாதம் முழுவதும் 20.64 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா். விற்பனை செய்யப்பட்ட லட்டு பிரசாத எண்ணிக்கை 99.07 லட்சம். அன்னதானம் உண்டவா்களின் எண்ணிக்கை 27.76 லட்சம், தலைமுடி காணிக்கை சமா்ப்பித்தவா்களின் எண்ணிக்கை 9.91 லட்சம். இ-உண்டியல் மூலம் ஏழுமலையானுக்கு ரூ.4.41 கோடியும், பத்மாவதி தாயாா் கோயிலில் ரூ.13 லட்சமும் வருவாய் கிடைத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT