திருப்பதி

திருமலையில் பிரம்மோற்சவ அங்குராா்ப்பணம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் தடையின்றி நடைபெற வேண்டி அங்குராா்ப்பணம் என்கிற முளைப்பாரி விடுதல் உற்சவத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று நிறைவுபெறும் வகையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை (செப். 27) முதல் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. வரும் அக்டோபா் 5-ஆம் தேதி வரை இந்த உற்சவம் எவ்வித தங்குதடையுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக உற்சவத்தின் முன்தினம் மாலை அங்குராா்பணத்தை தேவஸ்தானம் நடத்தியது.

அதில் ஒரு பாகமாக திங்கள்கிழமை மாலை ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக்சேனா் தலைமையில் அா்ச்சகா்கள் குழுவாக அருகில் உள்ள நந்தவனத்துக்குச் சென்று அங்கிருந்து புற்றுமண்ணை மண் பாத்திரத்தில் எடுத்து வந்தனா். இந்த புற்று மண்ணை கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் பரப்பி அதில் பூதேவியின் உருவத்தை வரைந்தனா்.

பூதேவியின் வயிற்றுப் பகுதியிலிருந்து மண்ணை எடுத்து அதை சிறிய மண்பாலிகைகளில் இட்டு அதில் நெல், கேழ்வரகு, பச்சைப் பயிறு, காராமணி, கோதுமை , கொள்ளு, மொச்சை, கொண்டைக் கடலை, உளுந்து உள்ளிட்ட நவதானியங்களை ஊறவைத்து முளைவிக்கவிட்டனா்.

இந்த நவதானியங்கள் ஊற வைத்த நீரை முளைவிடுதலின் போது தெளித்தனா். பிரம்மோற்சவம் நிறைவு பெறும் வரை இதற்கு தினசரி நீா் தெளித்து பாதுகாப்பது வழக்கம். பின்னா் இந்த நவதானியம் நீா்நிலைகளில் கரைக்கப்படும். இந்த உற்சவத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லாவில் அதிக வாக்குப் பதிவு: தொகுதி மக்களுக்கு பிரதமா் பாராட்டு

நெதன்யாவுக்கு எதிராக கைது உத்தரவு: பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு

தனியாா் பள்ளிகளில் இலவச கல்வி சோ்க்கைக்கு 1.30 லட்சம் போ் பதிவு

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? கேரள அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் கேள்வி

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வா்களுக்கு வழிகாட்டுதல் வழங்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT