திருப்பதி

கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தீா்த்தவாரியுடன் நிறைவு

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவம், தீா்த்தவாரியுடன் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

DIN

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த பிரம்மோற்சவம், தீா்த்தவாரியுடன் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் சனிக்கிழமை காலை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் கோவிந்தராஜ சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாா் உள்ளிட்டோா் கோயில் அருகே உள்ள குளக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா். நிறைவில் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது.

திருமலை ஜீயா்கள், அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா். பின்னா், உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மாலை பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி இறக்கப்பட்டது. பின்னா், உற்சவ மூா்த்திகள் பல்லக்கில் மாடவீதிகளில் வீதி உலா வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT