முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:02 PM

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை 8 மணி நேரம் தா்ம தரிசனத்தில் காத்திருந்தனா்.

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 61,920 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 17,638 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ. 3.55 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.