முகப்பு
திருப்பதி

திருமலை: 63,163 பக்தா்கள் தரிசனம்

Updated On : 13 ஏப்ரல், 2024 at 4:00 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 63,163 பக்தா்கள் தரிசித்தனா். 31,287 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே சனிக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள்,பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும் வெள்ளிக்கிழமை முழுவதும் 63,163 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31, 287 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.99

Advertisement

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments