திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

Din

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

இதனால், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 73,398 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 27,897 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியலில் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில் ரூ.4.46 கோடி வசூலானது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

ஏகே - 64 தயாரிப்பாளர் இவரா?

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு! முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

”வீட்டை விட்டு வெளியே வா விஜய்” என்ற விமர்சனத்திற்கு விஜய் பதில்!

அநீதி, அராஜகம்....திமுக பற்றிய விஜய்யின் திருக்குறள்! | TVK 3rd year anniversary

வேல்முருகனின் பாடலுக்கு விஜய் நடனம்! | TVK 3rd year anniversary

SCROLL FOR NEXT