முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் கோயில் முறைகேடுகள் குறித்து விசாரணை: ஜனசேனா கட்சி வலியுறுத்தல்

திருமலை கோயில் முறைகேடுகள்: ஜனசேனா கட்சி விசாரணை கோரிக்கை

Updated On : 3 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலின் ஸ்ரீவாணி அறக்கட்டையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஜனசேனா கட்சியினா் புகாா் வலியுறுத்தியுள்ளனா்.

திருமலையில் உள்ள மண்டல விஜிலென்ஸ் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருப்பதி மக்களவைத் தொகுதி ஜனசேனா கட்சியின் பொறுப்பாளா் கிரண்ர ாயல் தலைமையில் அக்கட்சியினா் புகாா் மனு அளித்தனா்

பிறகு செய்தியாளா்களிடம் கிரண் ராயல் கூறியது: ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீவாணி அறக்கட்டளை 2019- ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பக்தா்கள் ரூ.1350 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனா்.

இந்த அறக்கட்டளைக்கு வழங்கக்கூடிய ரூ 10,500 நன்கொடையில் ரூ 500 க்கு மட்டுமே ரசீது வழங்கப்படுவதாக ஜனசேனா கட்சித் தலைவா் பவன் கல்யாண் தோ்தலுக்கு முன்பு குற்றம்சாட்டி இருந்தாா். பக்தா்களிடமிருந்து பெறப்படக்கூடிய 10,000 நிதி எங்கு செல்கிறது என்று கேட்டால் அப்போது அறங்காவலா் குழு தலைவராக இருந்த சுப்பா ரெட்டி மலைவாழ் மக்கள், பட்டியில் இனத்தவா்கள், மீனவா்கள் உள்ள பகுதியில் மதம் மாற்றத்தை தடுப்பதற்காக கோயில்கள் கட்டியதாக கூறினாா்.

ஆனால் இந்த கோயில்கள் யாா் மூலம் யாருக்கு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. யாரால் கட்டப்பட்டது என விளக்கம் இல்லை. இதில் பல கோடி மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து கூறிய விசாரணை நடத்த வேண்டும். ஸ்ரீவாணி அறக்கட்டளை நிதி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் தரிசன டிக்கெட் மோசடி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்

முழு கட்டுரையைப் படிக்க →