முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 15 ஜூலை, 2024 at 9:56 PM
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)24 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

84,797 பக்தா்கள் தரிசனம்: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 84, 797 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 29,497 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.98 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.