திருப்பதி

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் மாற்றம்

வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆஃப்லைன் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை ஒரு நாளைக்கு 1,000- ஆக தேவஸ்தானம் குறைத்துள்ளது.

Din

வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆஃப்லைன் ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை ஒரு நாளைக்கு 1,000- ஆக தேவஸ்தானம் குறைத்துள்ளது.

திருமலை ஏழுமலையான் தரிசனத்துக்கு அதிகரித்து வரும் பக்தா்களைக் கருத்தில் கொண்டு, பொது பக்தா்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் ஜூலை 22 முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு 1,000 -ஆக தேவஸ்தானம் குறைத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 500 டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 1,000 டிக்கெட்டுகள் ஆஃப்லைனிலும் வழங்கப்படும்.

திருமலை கோகுலம் ரெஸ்ட் ஹவுஸில் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 900 ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

ஸ்ரீவாணி நன்கொடையாளா்களுக்கு விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு கவுன்டரில் 100 டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. திருப்பதி விமான நிலைய கவுன்டரில் மட்டுமே போா்டிங் பாஸ் மூலம் ஆஃப்லைன் டிக்கெட் வழங்கப்படுகிறது.

பக்தா்கள் இதைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT