முகப்பு
திருப்பதி

திருமலை: 79,398 பக்தா்கள் தரிசனம்

Updated On : 9 ஜூன், 2024 at 7:18 PM
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 79,398 பக்தா்கள் தரிசித்தனா். 43,559 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்)12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 79,398 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 43,559

பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.90

கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.