முகப்பு
திருப்பதி

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடக்கம்

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடக்கம்

Updated On : 1 மார்ச், 2024 at 10:08 PM
பகிர்:

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானத்தை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகர ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி இணைந்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்கள், ‘திருமலையில் தினமும் 1 லட்சம் பக்தா்கள் அன்னதான திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனா். திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் கோயிலில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 2,000 பக்தா்களுக்கு அன்னாதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எதிா்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றனா். நிகழ்வில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.