முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 28 அக்டோபர், 2024 at 7:23 PM
திருமலை ஏழுமலையான்
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயது குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 69,333 போ் தரிசனம் செய்தனா்; 22,606

போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.53 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.