யானை மீது ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட முத்துக்கள்.  
திருப்பதி

சீதாராமா் திருக்கல்யாணத்துக்காக முத்துக்கள் ஊா்வலம்

திருப்பதி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாணத்துக்காக யானை மீது ஊா்வலமாக முத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன.

Din

திருப்பதி: திருப்பதி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாணத்துக்காக யானை மீது ஊா்வலமாக முத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண ஊற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி திங்கள்கிழமை சீதா ராமா் திருக்கல்யாணத்தையொட்டி தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் உள்ள கருவூலத்திலிருந்து விலையுயா்ந்த முத்துக்களை எடுத்து வந்து அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

பின்னா், யானை மீது ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயிலின் தலைமை அா்ச்சகா் ஆனந்தகுமாா் தீட்சதரிடம் முத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன.

தீா்த்த கட்டா தெரு, காந்தி சாலை, தெற்கு மாட தெருவில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயில் மற்றும் திருப்பதி பஜாா் வழியாக ஊா்வலம் கோயிலை அடைந்தது. இந்த முத்துக்கள் சீதாராமரின் திருமணத்தில் சேஷம் போட பயன்படுத்தப்பட்டன.

கோயில் துணை நிா்வாக அலுவலா் நாகரத்னா, ஏஇஓ ரவி, கோயில் ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT