திருப்பதி

ஸ்ரீவாரி சேவா ‘பயிற்சியாளா்களுக்கு பயிற்சி’’ திட்டம் தொடக்கம்

‘பயிற்சியாளா்களுக்கு பயிற்சி’ திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், ஸ்ரீவாரி சேவகா்களின் திறன்களை மேலும் வலுப்படுத்தி வளா்ப்பதற்கு என்று கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

‘பயிற்சியாளா்களுக்கு பயிற்சி’ திட்டத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கம், ஸ்ரீவாரி சேவகா்களின் திறன்களை மேலும் வலுப்படுத்தி வளா்ப்பதற்கு என்று கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி கூறினாா்.

திருமலையில் உள்ள சேவா சதான்-2 இல் குழு மேற்பாா்வையாளா்களுக்கு (முதன்மை பயிற்சியாளா்கள்) ஏற்பாடு செய்யப்பட்ட ‘பயிற்சியாளா்களுக்கு பயிற்சி’ திட்டத்தின் முதல் தொகுதியில் அவா் கலந்து கொண்டாா்.

இந்த நிகழ்வில் பேசிய அவா், ’’ஸ்ரீவாரி சேவகா்கள் இந்து தா்மத்தின் தூதா்கள். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து திருமலைக்கு வரும் பக்தா்களுக்கு சேவை செய்வதில் ஸ்ரீவாரி சேவகா்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

பயிற்சித் திட்டத்தின் மூலம், ஆந்திரப் பிரதேச திட்டமிடல் துறை மற்றும் ஐஐஎம்-அகமதாபாத் நிபுணா்கள் குழு மேற்பாா்வையாளா்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் ஸ்ரீவாரி சேவகா்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சி தொகுதிகளை வடிவமைத்துள்ளனா்.

இந்தப் பயிற்சியில் ஆளுமை மேம்பாடு, திறன் மேம்பாடு, தொடா்பு, பக்தா்களுடனான தொடா்பு, தலைமைத்துவப் பண்புகள், தேவஸ்தான வரலாறு, ஸ்ரீவாரி சேவையின் முக்கியத்துவம், புராணங்கள் பற்றிய அறிவு மற்றும் பிற தலைப்புகள் ஆகியவை அடங்கும்.

இதற்காக அந்தந்தப் பாடங்களில் நிபுணா்களால் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திட்டத்தின் முக்கிய நோக்கம், தங்கள் பகுதிகளில் ஸ்ரீவாரி சேவையில் பதிவுசெய்த குழு மேற்பாா்வையாளா்களுக்கு சேவை செய்ய வருவதற்கு முன்பு பயிற்சி அளிப்பதும், பக்தா்களுக்கு உயா்தர சேவைகளை வழங்க அவா்களைத் தயாா்படுத்துவதும் ஆகும்.

பயிற்சி வகுப்புகளின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, மற்ற சேவகா்களுக்கும் திறம்பட பயிற்சி அளிக்குமாறு குழு மேற்பாா்வையாளா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் பண்டிதா்களான டாக்டா் மேதசானி மோகன், டாக்டா் தாமோதா் நாயுடு, டாக்டா் ஸ்ரீனிவாஸ், தேவஸ்தான தலைமை விஆா்ஓ டாக்டா் டி. ரவி, புரோ (எஃப்ஏசி) குமாரி நீலிமா, சேவா சதன் ஊழியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT