திருமலை கோப்புப் படம்
திருப்பதி

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், தேவைபடுகிறது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 63, 585 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,986 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.25 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பாக்ஸிங் டே டெஸ்ட்டிற்கான ஆஸி. அணி..! சுழல் பந்து வீச்சாளர்களுக்கு இடமில்லை!

காவல், காதல், ஒரு குற்றவாளி... Vikram Prabu-வின் Sirai Movie Review! | Dinamani Talkies

தில்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை!

கிறிஸ்துமஸ் ஏற்பாடுகளை அடித்து நொறுக்கிய இந்து அமைப்பினர்! அசாமில் பதற்றம்!!

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT