பிரயாக்ராஜில் வசந்த பஞ்சமி ஊஞ்சல் சேவை
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுவிய ஏழுமலையான்
திருப்பதிபிரயாக்ராஜில் வசந்த பஞ்சமி ஊஞ்சல் சேவை
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுவிய ஏழுமலையான்
திருப்பதி: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுவிய ஏழுமலையான் மாதிரி கோயில் வளாகத்தில், வசந்த பஞ்சமியை முன்னிட்டு, திங்கட்கிழமை சுவாமிக்கு சிறப்பு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
வேத பண்டிதா்கள் வேத மந்திரங்கள் ஓதிய நிலையில், சீனிவாச மூா்த்தி வீணா பாணியான சரஸ்வதி தேவி அலங்காரத்தில் மலா்களால் அழகுபடுத்தப்பட்ட ஊஞ்சலில் ஊஞ்சல் சேவை கண்டருளினாா்.
நிகழ்வில், அன்னமாச்சாா்யா திட்டக் கலைஞா்கள் அன்னமாச்சாா்யா சங்கீா்த்தனங்களைப் பாடினா். பெருந்திரளான பக்தா்கள் இறைவனின் ஊஞ்சல் சேவையை தரிசித்து மகிழ்ச்சியடைந்தனா்.
நிகழ்ச்சியில் துணை தலைமை செயல் அலுவலா் சிவபிரசாத், கூடுதல் செயலாளா் ஸ்ரீ ராம் கோபால், ஏஇஓ ரவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.