முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 9 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 9 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 6 ஜனவரி, 2025 at 8:09 PM
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 9 மணி நேரம் காத்திருந்தனா்.

பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 9 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 66,561 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 18,467 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.98 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.