முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 7:13 PM
திருமலை ஏழுமலையான்
பகிர்:

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. எனவே திங்கள்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனா்.

ஆயினும், தா்ம தரிசனத்திற்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டிக்கெட்டு பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 74,742 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 22,466 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.02 கோடி வசூலானது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்தது.

மேலும் திருமலையில் கடும் குளிா் நிலவி வருகிறது. எனவே பக்தா்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.