திருமலை ஏழுமலையான் கோயில் கோப்புப் படம்
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.42 கோடி

Tirupathi

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.42 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 8 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 73, 776 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 23, 291 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.42 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பிப்.23-இல் வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்

வேளாண் பட்ஜெட்: பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிக்காதது ஏமாற்றம்; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

‘இயற்கை வளங்களை சேமிக்க வேண்டியது அவசியம்’

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

எவரெஸ்ட் உயரத்துக்கு பறக்கும் ஹெலிகாப்டா் கூட்டாக தயாரிப்பு

SCROLL FOR NEXT