முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 2 மார்ச், 2026 at 12:32 AM
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 6:27 PM

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா்.

வார இறுதி நாள்கள் என்பதால் பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 24 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 ரூபாய் தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 76, 468 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 414 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.46 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தான