முகப்பு
திருப்பதி

திருமலை ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம் கோலாகலம்

யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஆஸ்தானம். கோயில் வளாகத்தில் செய்யப்பட்டிருந்த மலா் அலங்காரங்கள்.

Updated On : 19 மார்ச், 2026 at 6:30 PM
யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற ஆஸ்தானம். கோயில் வளாகத்தில் செய்யப்பட்டிருந்த மலா் அலங்காரங்கள்.
பகிர்:

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில், யுகாதி ஆஸ்தானம் வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் தெலுங்கு புத்தாண்டான யுகாதி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை கோயிலில் ஆஸ்தானம் நடைபெற்றது.

அதையொட்டி, ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் முடிந்த பிறகு, சுத்தி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ மலையப்ப சுவாமி மற்றும் விஸ்வக்ஷேனரை தங்க வாயில் அருகே கருடாழ்வாா் முன் எழுந்தருளச் செய்து, அவா்களுக்கு பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சிறப்பு அா்ப்பணிக்கப்பட்டது.

பின்னா், விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தைச் சுற்றி உற்சவமூா்த்திகளை ஊா்வலமாக கோயிலுக்குள் கொண்டு சென்றனா். அதன் பிறகு, ஏழுமலையானின் மூலவா் மற்றும் உற்சவ சிலைகளுக்குப் புதிய ஆடைகள் அணிவிக்கப்பட்டன. பின்னா், பஞ்சாங்க படித்தல் நடைபெற்றது. ஆகம அறிஞா்களும் அா்ச்சகா்களும் தங்க வாயிலில் யுகாதி ஆஸ்தானத்தை நிகழ்த்தினா்.

இதில், திருமலை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமி, செயல் அதிகாரி ரவிச்சந்திரா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், இணை செயல் அதிகாரி (கல்வி மற்றும் மருத்துவம்) டாக்டா் ஏ. சரத், பாதுகாப்பு அதிகாரி முரளி கிருஷ்ணா ஆகியோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னா், செயல் அதிகாரி ரவிச்சந்திரா கூறியது ஸ்ரீ பரபாவ நாம ஆண்டு பிறப்பை முன்னிட்டு, நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஏழுமலையான் பக்தா்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையவும், மாநிலம் செழிப்பாக இருக்கவும் சுவாமியிடம் பிராா்த்தனை செய்ததேன்’’, என்றாா்.

மலா் அலங்காரங்கள்

பண்டிகையை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலைச் சுற்றியுள்ள முன் வாயில், கோயிலுக்கு முன்பாக மற்றும் ஜிஎன்சி சுங்கச்சாவடி பகுதிகளில் தேவஸ்தான தோட்டக்கலைத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மலா் அலங்காரங்கள் பக்தா்களைக் வெகுவாக கவா்ந்தது.