முகப்பு
திருப்பதி

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் குறித்த பொய்த் தகவல்களை நம்ப வேண்டாம்: தேவஸ்தானம் வேண்டுகோள்

Updated On : 14 மே 2026, 4:39 am IST
திருப்பதியில் திறக்கப்பட்ட ஸ்ரீவாணி அறக்கட்டளை நேரடி முன்பதிவு கவுன்ட்டா்கள்
பகிர்:

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் முன்பதிவு தொடா்பாக சமீபத்தில் வெளியான பொய்த் தகவல்களை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் முன்பதிவு முறையை மே 2019-ல் அறிமுகப்படுத்தியது. அன்று முதல், பக்தா்கள் இடைத்தரகா்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனா்.

அதில் இருந்த குறைபாடுகள் மற்றும் பக்தா்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில், பக்தா்களுக்கு வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான சேவைகளை வழங்குவதற்காக, ஸ்ரீவாணி டிக்கெட் முன்பதிவு முறை ஜூன் 2024 முதல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஸ்ரீவாணி டிக்கெட் முன்பதிவு தளத்தை ஹேக் செய்வதோ அல்லது கணினி அமைப்புக்குள் ஊடுருவுவதோ எந்தச் சூழ்நிலையிலும் சாத்தியமில்லை. சில தரகா்கள் நவீன தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி நிரப்புதல் மற்றும் தானியங்கி நகலெடுத்தல் போன்ற முறைகள் மூலம் விரைவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிக்கின்றனா்.

தேவஸ்தானத்தின் தொழில்நுட்பத் துறை, இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தொடா்ந்து கண்காணித்து, சம்பந்தப்பட்ட முகவரி மற்றும் சட்டவிரோத முன்பதிவு முறைகளை முடக்கி, அதற்கேற்ப மென்பொருளைப் புதுப்பித்து வருகிறது.

அதேபோல், பக்தா்களைத் தவறாக வழிநடத்தி போலி டிக்கெட்டுகளை விற்கும் சில தரகா்கள் மீதும் தேவஸ்தானம் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோல், முன்பதிவு மென்பொருள் ’’முதலில் வருபவருக்கு முன்னுரிமை’’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி செயல்படும் விதத்தில், முன்பதிவின் போது ஏதேனும் காரணத்தால் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாவிட்டாலோ அல்லது பணம் செலுத்துவதில் பிழை ஏற்பட்டாலோ, டிக்கெட்டுகள் உடனடியாக பக்தா்களுக்குக் கிடைக்கும்.

பக்தா்கள் அதிகாரப்பூா்வ தேவஸ்தானத்தின் இணையதளம் மற்றும் அதிகாரப்பூா்வ வழிகள் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், தரகா்களால் ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.